
நடிகர் ஜெயம் ரவி, ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களிடையே பெயர் பெற்றார். பிரபல கதாநாயகனாக வந்து கொண்டிருக்கும் அவர் ஜன கன மன என்ற திரைப்படத்தில் டாப்சியுடன் நடித்திருக்கிறார்.
அதனை தயாரிப்பாளர் சுதன் தயாரித்துள்ளார். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த பிறகு அதனை நிறுத்தி விடுமாறு ஜெயம் ரவி கூறியதால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, அதே தயாரிப்பாளருடன் இறைவன் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார்.
அந்த திரைப்படம் சரியாக ஓடவில்லை. எனவே, ஜெயம் ரவி அவரிடம் மற்றொரு திரைப்படத்திற்கு சம்பளம் வாங்காமல் கால்ஷீட் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை. அது குறித்து தயாரிப்பாளர் சுதன் கேட்டபோது, ஜெயம் ரவி என்னுடன் அந்த திரைப்படத்தில் டாப்ஸியும் நடித்திருந்தார்.
அவரை வைத்து நீங்கள் தயாரித்த அனபெல் சேதுபதி திரைப்படம் நன்றாக ஓடிவிட்டது. அதனால், கிடைத்த லாபம் இதற்கு சரியாகி விட்டது என்று கூறி, தன்னால் நடிக்க முடியாது என்று தெரிவித்ததாக வலைப்பேச்சில் பிஸ்மி கூறியிருக்கிறார்.