விஜய் படத்துல நடிக்க மறுத்த ஜோதிகா… என்ன காரணம் தெரியுமா…? வெளியான வீடியோ…!

நடிகை ஜோதிகா தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர். ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த அவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு, திரையுலகிலிருந்து சிறிது காலங்கள் விலகி இருந்த அவர், 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மறுப்பிரவேசம் செய்தார்.

   

இரண்டாவது சுற்றிலும், வெற்றி படங்களை கொடுத்து கலக்கி கொண்டிருக்கிறார். தற்போது, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மெர்சல் திரைப்படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தன்னை தான் அணுகினார்கள் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் அந்த கதாபாத்திரத்தில் சில வேறுபாடுகள் செய்ததால் அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். தளபதி விஜய்யுடன் சேர்ந்து ஜோதிகா நடித்த திருமலை, குஷி ஆகிய 2 திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. எனவே, மெர்சல் திரைப்படத்தில் அவர் மீண்டும் விஜய்யுடன் இணைந்திருந்தால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருப்பார்கள்.