
பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, மன்சூர் அலிகான் யாருக்கும் எதற்கும் பயப்பட மாட்டார். ஆனால் கேப்டன் மீது மட்டும் அவருக்கு மரியாதை கலந்த பயம் உண்டு. மறுமலர்ச்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் தென்பெண்ணை ஆற்றில் நடந்தது.
தங்கர் பச்சான் தான், கேமரா மேன். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் தயார் நிலையில் இருக்கிறார்கள். காலையில் 8 மணிக்கு படப்பிடிப்பை தொடங்க வேண்டும். அந்த சமயத்தில், ஏதோ ஒரு பிரச்சனை காரணமாக படப்பிடிப்பிற்கு வர மன்சூர் அலிகான் மறுத்துவிட்டார். ஹோட்டல் ரூமில் இருந்து கொண்டு, வர முடியாது என்று கூறிவிட்டார்.
படக்குழுவினர் பலரும் நேரில் சென்று அவரை அழைத்தும் அவர் வரவில்லை. உடனே கேப்டனுக்கு அந்த தகவல் சென்றது. அவர் மன்சூர் அலிகானிடம் போனை கொடுங்கள் என்றார். அவரிடம் பேசிய கேப்டன், என்னய்யா? ஷூட்டிங் போமாட்டியா? தொலைச்சிருவேன் ராஸ்கல் என்றார். உடனே, மன்சூர் அலிகான், அதெல்லாம் ஒண்ணுமில்லை கேப்டன். இப்போ உடனே போறேன் என்று கூறி சென்றுவிட்டார் என கூறியிருக்கிறேன்.