நீடிக்கும் பருத்திவீரன் பிரச்சனை… படத்தை வாங்கிட்டு பணம் தரல… சூர்யா, கார்த்தி வாயே தொறக்கல..!

பருத்திவீரன் படத்தில் என்ன பிரச்சனை என்பது குறித்து பாலு கூறியிருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, இயக்குனர் அமீர் தான் பருத்திவீரன் திரைப்படத்தை தயாரித்தார். முதல் காப்பி அடிப்படையில் படத்தை எடுத்து முடித்ததாக ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அவர், இரண்டரை கோடி பட்ஜெட்டில் எடுக்க போவதாக கூறிவிட்டு நான்கு முதல் நான்கே முக்கால் கோடி வரை பட்ஜெட் அதிகரித்து விட்டது. நாட்களும் அதிகமாகிவிட்டது என்று கூறியிருந்தார். ஆனால் அமீர் கூறியது, படத்தை பார்த்துவிட்டு சூர்யா மற்றும் கார்த்தி ஹிட் ஆகும் என்று முடிவெடுத்துவிட்டனர்.

   

எனவே, படத்தை வாங்குவதற்கு முடிவெடுத்தனர். அதன்படி, படத்தை வெளியிட்டுவிட்டார்கள். ஆனால், எனக்கு பேசப்பட்ட தொகையை தரவில்லை. அது குறித்து கேட்டபோது சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே எதுவும் பேசவில்லை. நடிகர் சிவகுமாரிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை. எனவே, தான் நீதிமன்றத்தை நாடினேன். அந்த வழக்கு இப்போது வரை நடக்கிறது என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.