சொந்த வாழ்க்கையிலும் பிரம்மாதமா நடிப்பாரு… நடிகர் திலகம் குறித்து பேசிய பத்திரிகையாளர் பாண்டியன்…!

பத்திரிக்கையாளர் பாண்டியன் பேட்டி ஒன்றில் மறைந்த நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பற்றி கூறியிருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பை பற்றி பலரும் புகழ்வார்கள். அவரின் நடிப்பை பற்றி கூறவே வேண்டாம். ஆனால், சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் அவர் சிறந்த நடிகர் தான்.

உண்மையில் அவர் நன்றாக மது அருந்தக் கூடியவர். படப்பிடிப்பு தளத்தில் வைத்து யாருக்கும் தெரியாமல் குடித்துக்கொண்டிருப்பார். மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக, பிளாஸ்க்கில் மதுவை ஊற்றி வைத்திருப்பார்.

   

தன் உதவியாளரிடம், “டேய் டீ கொண்டு வாடா” என்று கேட்பார். உடனே அவர், மதுவை அதில் ஊத்தி கொண்டு வந்து கொடுப்பார். அதனை வாங்கி, சிவாஜி கணேஷன் சூடாக இருப்பது போல் ஊதி ஊதி கையில் துணி வைத்துக்கொண்டு அழகாக டீ குடிப்பது போல் நடித்துக் கொண்டே குடித்து விடுவார் என தெரிவித்துள்ளார்.