
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கிண்டியில் இருக்கும் ரேஸ் கோர்ஸில் இன்று நடக்கிறது. இந்த விழா, தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்டாலும், திமுக நடத்தும் விழாவாகவே கருதப்படுகிறது. இந்த நூற்றாண்டு விழாவில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் திரையுலகை சேர்ந்த நடிகர்களும் பங்கேற்க இருக்கிறார்கள்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களை அழைத்திருக்கிறார்கள். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், சமீபத்தில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் இறப்பிற்கு பல நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு அவர்கள் வந்தால் ரசிகர்கள் வச்சு செய்துவிடுவார்கள்.
எனவே, முன்னணி நடிகர்கள் சிலர் கலக்கத்தில் உள்ளனர். தற்போது, உதயநிதி ஸ்டாலின் தான் முக்கிய கதாநாயகர்களின் திரைப்படங்களை விநியோகித்து வருகிறார். எனவே, அவரை பகைக்க முடியாது. இந்த விழாவில், முன்னணி நாயகர்கள் கட்டாயம் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.