சினிமாவுக்காக எதையும் செய்யும் கமல்… ரூமை காலி செய்த நெகிழ்ச்சி சம்பவம்…. பிரபலம் பகிர்ந்த ரகசியம்…!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பிற்காக அதிக விருதுகள் வாங்கிய நடிகர். சினிமாவிற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என்று கூறலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு திரைப்படங்களிலும் தன் அசாத்திய நடிப்பால் அசர வைத்திருப்பார். நடிப்பு மட்டுமல்லாமல் கதை திரைக்கதை வசனங்கள் எழுதுவது, பாடல்கள் பாடுவது, நடனம், இயக்கம், தயாரிப்பு என்று சினிமா துறையில் அவர் கால் வைக்காத இடங்களே இல்லை.

   

மேலும், தன் திரைப்படங்களில் புது புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர். சினிமாவிற்காக எதை வேண்டுமானாலும் இழக்க கூடியவர் கமலஹாசன் என்று பலரும் கூறுவது உண்டு. அந்த வகையில் இயக்குனர் சிகரம் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1980 ஆம் வருடத்தில் வெளிவந்த நிழல்கள் திரைப்படத்தின் படப்பிடிப்பு கமலஹாசன் வீட்டில் உள்ள அவரின் சொந்த அறையில் தான் நடந்திருக்கிறது.

இயக்குனர் பாரதிராஜா உடன் நல்ல பழக்கத்தில் இருக்கும் கமலஹாசன் அவர் கேட்டவுடன் அதற்கு சம்மதித்து தன் அறையை காலி செய்து விட்டாராம். படப்பிடிப்பு முடியும் வரை பக்கத்து அறையில் படுக்கை மற்றும் மெத்தை இல்லாமல் தங்கி இருக்கிறார். படப்பிடிப்பு முழுமையாக முடியும் வரை அங்கு தான் இருந்திருக்கிறார்.

அப்போது, தன் அறையில் நடக்கும் படப்பிடிப்பை அவ்வபோது சென்று பார்ப்பாராம். அப்படி ஒரு முறை கமல் சென்று பார்த்துக் கொண்டிருந்தபோது, நிழல்கள் ரவி பதற்றத்தில் சரியாக நடிக்கவில்லையாம். கமல் அங்கிருந்து புறப்பட்டு சென்ற பிறகே நன்றாக நடித்திருக்கிறார். இதனை பேட்டி ஒன்றில் அவரே பகிர்ந்துள்ளார்.