கவுண்டமணி வளர்ச்சியை பார்த்து பயந்து.. சதி வேலை பண்ண கமல்.. என்ன செய்தார் தெரியுமா.?

நகைச்சுவை மன்னனாக வலம் வந்த நடிகர் கவுண்டமணி முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்தால் அவர்களையே மிஞ்சும் அளவிற்கு கவுண்டர்களை போடுவார். அந்த அளவிற்கு நகைச்சுவையில் உச்சம் தொட்டவர் என்றே கூறலாம். நாடகங்களில் நடிக்கும் போது தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் திணறும் அளவிற்கு கவுண்டர்களை போட்டு விடுவார்.

   

திடீரென்று நடித்துக் கொண்டிருக்கும் போதே, அந்த சமயத்திற்கு ஏற்றவாறு கவுண்டர்களை பேசுவதில் அவர் கில்லாடி. அதனால் தான் அவரின் பெயர் கவுண்டர் மணி. ஆனால், அது மருவி, கவுண்டமணி மணி என்று ஆனது. இந்நிலையில் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு உலகநாயகன் கமல்ஹாசனே, நடிகர் கவுண்டமணியின் நகைச்சுவை பார்த்து திணறி இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இது பற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, பேர் சொல்லும் பிள்ளை திரைப்படத்தில் கவுண்டமணி முழுமையாக நகைச்சுவை மட்டுமே செய்ய வேண்டாம், அவரின் கதாபாத்தில் சிறிது வில்லத்தனமும் இருக்க வேண்டும் என்று கூறி, அந்த படத்தில் அவரை வில்லனாக நடிக்க வைத்தது கமல் தான் என்று கூறியிருக்கிறார்.

ஏனெனில் அவர் தொடர்ந்து, பயங்கரமாக கவுண்டர்களை போட்டு தன்னையே திணறடித்து விடுவார் என்று தான் கமல் அவ்வாறு இயக்குனரிடம் கூறியிருக்கிறார் என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.