ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்… நடிகர் ராஜாவை நியாபகம் இருக்கா..? இப்போ எப்படி ஆயிட்டாரு பாருங்க…!

தமிழ் திரையுலகில் கருத்தம்மா திரைப்படத்தில் மருத்துவராக நடித்து மக்களிடையே பிரபலமானவர் நடிகர் ராஜா. அதனை தொடர்ந்து கடலோர கவிதைகள், வேதம் புதிது போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அன்றைய காலகட்டத்தில் இவருக்கு தனி ரசிகர் கூட்டமே இருந்தது.

   

குறிப்பாக, கல்லூரி பெண்களின் விருப்பமான நடிகராக இருந்தார். தொடர்ந்து சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு, இவரை எந்த திரைப்படங்களிலும் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு இவரின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதனை தற்போது இணையவாசிகள் வைரலாக்கி கொண்டு இருக்கிறார்கள்.