
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இத்தொடரில் சஞ்சீவ் கார்த்திக் கதாநாயகனாகவும் கயல் என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை சைத்ரா ரெட்டியும் நடித்து வருகிறார்கள்.
கடந்த 2 நாட்களாக இத்தொடரில் கயலுக்கு விபத்து ஏற்படும் காட்சிகள் தான் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அது தொடர்பான காட்சிகளை மக்கள் எதிர்பார்ப்புடன் பார்த்து வருகிறார்கள். இந்நிலையில், கயலாக நடிக்கும் சைத்ராவிற்கு விபத்து ஏற்படும் காட்சிக்கான படப்பிடிப்பு நடக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
அதில், அவர் மீது கார் மோதும் காட்சியும், அதன்பிறகு ஏற்படும் காயத்திற்கான மேக் அப் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது.