அவரு போனை முதலில் செக் பண்ணனும்… அப்போதா எல்லாம் வெளிய வரும்… சிவகார்த்திகேயன் பற்றி ஓபனாக கூறிய நடிகை..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரை உலகின் பிரபல நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர், நடிகர் விஜய், சூர்யா, விக்ரம் மற்றும் சிவகார்த்திகேயன் என்று  முன்னணி கதாநாயகர்கள் பலருடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் முன்னணி கதாநாயகர்கள் சிலரின் புகைப்படங்களை காண்பித்து இதில் யாரின் செல்போனை வாங்கி பார்க்க விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது.

 

   

அதற்கு, அவர் சிவகார்த்திகேயன் என்று பதில் அளித்தார். ஏனெனில் அவர் எப்போதும் செல்போனை வைத்து ஏதாவது பார்த்துக் கொண்டே இருப்பார். அதில் என்ன இருக்கிறது? என்று நான் எட்டிப் பார்த்தால் கூட தெரியாது. எனவே, அவரின் போனை ஒரு நாள் வாங்கி என்ன பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று பார்க்க விரும்புகிறேன் என பதில் அளித்துள்ளார். இதற்கு வழக்கம் போல் இணையதள வாசிகள் சிவகார்த்திகேயனை கலாய்த்து வறுத்தெடுத்து வருகிறார்கள்.