
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், கடந்த 2015-ஆம் வருடத்தில் இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனைத்தொடர்ந்து, முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். பிரபலமான நடிகையாக இருக்கும் அவரின் கைவசம் தற்போது, ரகு தாத்தா, கண்ணிவெடி, ரீட்டா, ரிவால்வர் மற்றும் சைரன் போன்ற படங்கள் உள்ளன.அவரின் அழகுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் சிறிதும் மேக் அப் போடாமல் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.அந்த புகைப்படம் அவர் திரையுலகிற்கு வருவதற்கு முன்பாக எடுக்கப்பட்டிருக்கிறது.
எனினும், சிறிதும் மேக் அப் போடாமல் இருக்கும் அவரின் புகைப்படத்தை பார்க்கும் போது, இவரா கீர்த்தி சுரேஷ்? என்று நினைக்க தோன்றுகிறது.