
விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்று மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்கள் பலர். அந்த வகையில் கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் KPY பாலா.
தற்போது இவர் பல திரைப்படங்களில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமூக அக்கறை கொண்டு பல உதவிகளை செய்து வருகிறார் பாலா. சமீபத்தில் கூட மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மாற்று திறனாளிகளுக்கு வண்டி வாங்கி கொடுப்பது ,கண்பார்வை இழந்த சிறுவன் அறுவை சிகிச்சைக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
KPY பாலா சமீபத்தில் செய்யும் உதவிகளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸும் பங்களித்து வருகிறார்.இந்நிலையில் பாலா தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறாராம். அந்த கனவை ராகவா லாரன்ஸ் தான் நிறைவேற்றி வைத்திருப்பதாக பாலா தெரிவித்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram