
இயக்குனர் ராஜமோகன் இயக்கி கடந்த 2008 ஆம் வருடத்தில் வெளிவந்த குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. காதல் ஜோடிகளின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்களால், இருவரும் பிரிந்துவிடுவார்கள்.
அதன்பிறகு, அவர்கள் எதிர்கொள்ளும் மோசமான நிகழ்வுகள் தான் படத்தின் கதை. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த தனன்யா கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருந்தார்.
அவரின் அப்பாவியான முகம், எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அந்த படத்திற்கு பிறகு அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு அவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அப்பாவி பெண் போன்று நடித்திருந்த அந்த தனன்யாவா? இவர் என்று கேட்கும் அளவிற்கு மாடர்னாக உள்ளார்.