
‘குஷி’ படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகை சமந்தா, கோலிவுட்டில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார்.
தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து, நடித்துள்ள திரைப்படம் ‘குஷி’. இப்படம் காதல், குடும்பம் மற்றும் ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகியுள்ளது. ஷிவ நிர்வாணா இயக்கி வரும் இப்படம், வருகிற செப்டம்பர் 1-ம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.
இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தா உடன் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
திருமண ஆசை
இந்நிலையில் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் என வெளியிட்டு திரைப்படத்தை பிரமோஷன் செய்து வரும் சமந்தா, விஜய் தேவரகொண்டா பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். அதில், விஜய் தேவர்கொண்டாவிற்கு குஷி படத்திற்கு பிறகு தான் திருமணம் செய்து கொள்ளும் ஆசையே வந்துள்ளதாக சமந்தா கூறியுள்ளது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது.
ஏனெனில் இந்த படம் திருமணம் பற்றியதாக இருப்பதால் இவருக்கு இந்நேரத்தில் இப்படியொரு ஆசை வந்துள்ளது எனவும் இதனை பார்த்த நெட்டிசன்கள், “ விஜய் தேவர்கொண்டாவிற்கு திருமணமா?” என கேள்வியெழுப்பி வருகின்றனர்.