
அமலாபால்
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால். பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இவர் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
ஆடை படம்
ரத்ன குமார் இயக்கத்தில் 2019 -ம் ஆண்டு ஆடை திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அமலாபால் நடித்திருப்பார். மேலும் ஆடை, டாக்டர், ஜெயிலர் படத்தில் ஒளிப்பதிவாளரான விஜய் கார்த்திக் கண்ணன், யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்தது சவாலான விசயம் என்றும் இந்த படத்தில் பல கண்ணாடி காட்சிகள் இருந்த நிலையில், அது எங்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது என்றார்.
இப்படத்தின் ஒரு காட்சியில் அமலா பால், ஆடையே இல்லாமல் அமர்ந்து இருப்பார். ஆனால், அந்த காட்சியில் கொஞ்சம் கூட ஆபாசமே தெரியாத அளவுக்கு எடுத்தோம். மேலும் அக்காட்சியை எடுக்க கிட்டத்தட்ட 16 மணிநேரம் ஆனது என்று கூறியுள்ளார். இந்த படப்பிடிப்பு நடக்கும் போது, நிர்வாணமாக நடிக்க அமலா பால் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் இந்த படத்தை எடுத்திருக்க முடியாது. மேலும் அந்த மாதிரியான காட்சிகள் எடுக்கும் போது, மொத்தம் 9 பேர் மட்டும் தான் படப்பிடிப்பில் இருந்தோம். இவ்வாறு கார்த்திக் கூறியுள்ளார்.