
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படத்தை அவரின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கிறார். அத்திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி அன்று ரிலீஸ் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான குட் நைட் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நடிகர் மணிகண்டனின் லவ்வர் திரைப்படம் அதே தேதியில் வெளியாக உள்ளதாக முதலில் கூறப்பட்டது.
ஆனால், அதன் பிறகு அத்திரைப்படத்தின் தேதி மாற்றப்பட்டது. எனவே, தனியாக களமிறங்கி லால் சலாம் அதிக வசூல் குவித்துவிடும் என்று தயாரிப்பாளர் தரப்பில் நம்பப்பட்டது. இந்நிலையில், அதே தேதியில் நடிகர் ஜெயம் ரவியின் சைரன் திரைப்படம் வெளியாக உள்ளதாக புதிய தகவல் ஒன்றை வலைப்பேச்சில் பிஸ்மி கூறியிருக்கிறார்.