பக்கா பிளான் பிக்பாஸ் வீட்டுக்கு குடியேறிய… ‘அந்த 18 பேர்’ லிஸ்ட் ..! யார் யார் தெரியுமா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு  என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது .இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 வரை முடிந்த நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு பிக் பாஸ் சீசன் 7 தொடங்க உள்ளது. அதில் பங்கேற்கும் 18 போட்டியாளர்களின் லிஸ்ட் இதில் காண்போம்.

கூல் சுரேஷ்,யுகேந்திரன்,நிக்சன்

   

பிரபல முன்னாடி நடிகர் மற்றும் கன்டென்ட் குடோன் என்று அழைக்கப்படும் கூல் சுரேஷ் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொள்கிறார். இந்த சீசனில் முதலாளாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போட்டியாளரும் இவர்தான்.மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் போட்டியாளராக கலந்து கொண்டு போட்டியாளராக   கலந்து கொள்கிறார்.இசைகளின் வகைகள் ஏராளம் அவ்வாறு  மக்களுக்கு புரியும் வகையில்  பாடும்  பாடல் ராப். ராப் பாடகரான நிக்சன் போட்டியாளராக களமிறங்குகிறார்.

 பிரதீப் ஆண்டனி,மணிச் சந்திரா , விஷ்ணு

முன்னாள் பிக் பாஸ் சீசன் போட்டியாளர்  நடிகர் கவினி நெருங்கிய தோழன் தோழன் மற்றும் நடிகருமான பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் போட்டியில் களமிறங்குகிறார்.விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கலாய்த்து நடனமாடிய நம் அனைவருக்கும் பிடித்த டான்ஸ் மாஸ்டர் மணிச் சந்திரா பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொள்கிறார்.ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா தொடரின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகர் விஷ்ணு.  இவர்போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார்.

 சரவண விக்ரம், பாவா செல்லதுரை,விஜய் வருமா, 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் கடைசி தம்பியா கண்ணன் கதாபாத்திரத்தில்  நடுத்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் சரவண விக்ரம், இவர்  பிக் பாஸ் வீட்டிற்கு செல்கிறார்.மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளரும் மற்றும் குணச்சித்திர நடிகருமான பாவா செல்லதுரை பிக் பாஸ் நிகழ்ச்சியும் போட்டியாளராக கலந்து கொள்கிறார்.விளம்பரங்கள் மற்றும் மாடலிங் துறையில் பணியாற்றி வரும் விஜய் வருமா இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்கிறார்.

விசித்ரா,ரவீனா ,வினுஷா தேவி:
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை விசித்ரா பிக் பாஸ் போட்டியில்  களமிறங்கியுள்ளார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மௌன ராகம்’ சீரியல் நடித்து சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ரவீனா. இவர் போட்டியாளராக கலந்து களமிறங்கியுள்ளார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்த நடிகை வினுஷா தேவி.இவர்   போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

ஜோவிகா,அக்‌ஷயா,மாயா:

பிக் பாஸ் இன் முன்னாள் போட்டியாளர் மற்றும் நடிகை வனிதா விஜயகுமாரி மூத்த மகள் ஜோவிகா பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ளார்.லவ் டுடே படத்தின் நடிகையான  இவானாவின் தங்கை  அக்‌ஷயா  உதயகுமார் பிக் பாஸ் போட்டியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் வெளியான வெற்றி பெற்ற படமான விக்ரம் படத்தில் நடித்த நடிகை மாயா கிருஷ்ணன் இந்நிகழ்ச்சியில்  போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

ஐஷு,பூர்ணிமா ரவி,அனன்யா ராவ்

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் அமீரின் தங்கை மற்றும் நடன கலைஞருமான ஐஷு  போட்டியாளராக களமிறங்குகிறார்.சோசியல் மீடியாவில் youtube மூலம் மிகவும் புகழ்பெற்ற யூடியூபரான பூர்ணிமா ரவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்கிறார்.பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளரான பாலாஜி முருகதாஸின் தோழியமான அனன்யா ராவ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்கிறார்.