LCU கேள்விப்பட்ருக்கோம் அதென்னப்பா RCU… ஏகப்பட்ட பிரம்மாண்டம்… கொல மாஸ் காட்டும் லோகேஷ்…!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன் முதல் திரைப்படத்தின் மூலமே சிறந்த இயக்குனராக நிரூபித்து விட்டார். தொடர்ந்து அவர் இயக்கிய அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. அந்த வகையில், தற்போது ரஜினிகாந்தின் 171 வது திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

   

அதிரடி கதைக்களத்தில் உருவாகி வரும் அத்திரைப்படத்தில் ரஜினி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டிருக்கிறது. திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ஆரம்பமாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களில் LCU தான் பிரபலம்.

அதாவது லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களில் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் அடுத்த படத்திற்கான தொடர்பு இருக்கும். அந்த வகையில், தற்போது புதிய விதமாக ரஜினிகாந்தை வைத்து இயக்குவதால் RCU என்று புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்தியிருப்பதாக  கூறப்பட்டிருக்கிறது.

அதாவது, ரஜினி சினிமாட்டிக் யூனிவெர்ஸ். மேலும் ரஜினிகாந்தை இளமையாக காட்டுவதற்காக De aging தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. எனவே, லோகேஷ் கனகராஜ் பயங்கர திட்டங்களை வைத்திருக்கிறார். 3டி தொழில்நுட்பமும் அதில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.