
90-களில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை மக்கள் விரும்பி பார்ப்பார்கள். அந்த வகையில், அன்றைய காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது லொள்ளு சபா தான். புதிதாக வந்த திரைப்படங்களின் காட்சிகளை தங்கள் பாணியில் நடித்து கலாய்த்து இருப்பார்கள்.
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அப்போது மிகப்பெரிய அளவில் ஆதரவு இருந்தது. அந்நிகழ்ச்சி மூலம், வெள்ளி திரையில் அறிமுகமாகி பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் சந்தானம். அவரை போன்று ஜீவா, மனோகர், சேஷூ போன்ற பலரும் திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளனர்.
அந்த வகையில் நடிகர் சேஷு பல திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து மக்களிடையே பெயர் பெற்றவர். சமீபத்தில் வெளியான சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் அவர் நடனமாடும் நகைச்சுவை காட்சி ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில், சேஷூ உடல்நல குறைவால் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
நடிகர் சேஷூ மருத்துவமனையில் அனுமதி
நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்#வடக்குப்பட்டி_ராமசாமி படத்தில் சிறப்பாக நடித்து, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.@GovindarajPro #Seshu pic.twitter.com/56rFvDi7mL
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) March 15, 2024