சினிமாவை தாண்டி நடிகர் விஜய் எத்தனை தொழில் செய்கிறார் தெரியுமா?..அடடே  இது தான் முதன்மை தொழிலா!!!?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான  நடிகர்களில் ஒருவர்  நடிகர் விஜய் இவரின் உண்மையான பெயர் ஜோசப் விஜய். இவரது தந்தை S A சந்திரசேகர் ஒரு திரைப்பட இயக்குனர், தாய் ஷோபா ஒரு பின்னணி பாடகர் மற்றும் கர்நாடக பாடகியும் கூட. நடிகர் விஜய் கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா உயர்நிலை மேல்நிலைப் பள்ளி மற்றும் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.

   

அதன் பிறகு சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார் .நடிகர் விஜய் 1984 ஆம் ஆண்டு வெளியான ‘வெற்றி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் நடிக்கும் போது இவருடைய வயது 10.அதைத் தொடர்ந்து இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இவர் இயக்குனர் எசு. ஏ. சந்திரசேகர்இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் நடிகராக அறிமுகமானார். இதை தொடர்ந்து செந்தூரப் பாண்டியன், ரசிகன், ராஜ பார்வையிலே போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான’ பூவே உனக்காக’ என்ற படமானது இவரின் திரைப்பட பயணத்திற்கு ஒரு திறப்பு முனையாக அமைந்தது. இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

இவர் தமிழில் தமிழில் வாரிசு, மாஸ்டர், பிகில், சர்க்கார், துப்பாக்கி, நண்பன், வேலாயுதம், சுறா, வேட்டைக்காரன், குருவி, அழகிய தமிழ் மகன், போக்கிரி, சிவகாசி, சச்சின் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.நடிகர் விஜய் ‘லியோ’ என்ற திரை படத்தில்  நடித்துள்ளார் தற்போது அந்த திரைப்படம் 19 அக்டோபர் அன்று வெளியாக உள்ளது. நடிகர் விஜய் ‘தளபதி  68’ திரைப்படத்தில்  நடித்து வருகிறார் இப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாக உள்ளது.

இவர் கமிட்டாகியுள்ள படங்களில் விரைவில் நடித்து முடித்துவிட்டு அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வருகிறது, ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.நடிகர் விஜய்  நடிப்பை  தாண்டி   ரியல் எஸ்டேட் தொழிலில் அதிகமாக முதலீடு செய்திருக்கிறாராம், அதேபோல் பல அப்பார்ட்மெண்ட்டுகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறாராம், திருமண மண்டபங்கள் உள்ளனர் .

சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து சினிமாவிலேயே படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறாராம்.நடிகர் விஜய் ஷாப்பிங் மால்களை கட்டியும் வாடகைக்கு விட்டிருக்கிறாராம். இவர்  முக்கியமாக ரியல் எஸ்டேட் தொழிலில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறாராம்.தற்போது இந்த செய்தியானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.