வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை.. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களை.. மகிழ்ச்சியில் ஆழ்த்திய மைம் கோபி..!

திரை வாழ்க்கைக்கும் நிஜ வாழ்க்கைக்கு நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. பெரும்பாலும் திரையில் வில்லனாக மிரட்டும் பல கதாநாயகர்கள் நிஜத்தில் மிகவும் நல்லவர்களாகவே இருப்பார்கள். அந்த வகையில் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மைம் கோபி.

   

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் டைட்டில் வின்னர் ஆனார். அந்த நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றிருந்த சமயத்தில் புற்றுநோயால் பாதிப்படைந்திருந்த குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கி வருவதாகவும் மேலும் பல உதவிகள் செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் கூறிய வாக்கை நிறைவேற்றியுள்ளார். அதாவது தன் வருமானத்தில் ஒரு பங்கை சமூக சேவைக்காக பயன்படுத்தி வரும் மைம் கோபி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றி பெறும் பணத்தை புற்றுநோயால் பாதிப்படைந்த மக்களுக்கு வழங்குவதாக கூறியிருந்தார்.

அதன்படி, தற்போது புற்றுநோய் பாதிக்கப்பட்ட மக்களை விமானத்தில் அழைத்து சென்று இருக்கிறார். பலருக்கும் தங்கள் வாழ்க்கையில் எப்படியாவது விமானத்தில் சென்று பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ வாழ்க்கையை பெரும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். அந்த சூழல், ஒரு நாளாவது அவர்கள் மகிழ்வோடு பறக்கட்டும் என்று இப்படி ஒரு நெகிழ்ச்சியான செயலை செய்திருக்கிறார் மைம் கோபி.