
சின்னத்திரையில் பிரபல ஜோடியாக வலம் வரும் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவ்வபோது இணையதளங்களில் வெளியிடுவார்கள். மேலும், தாங்கள் செல்லும் சுற்றுலாக்கள் குறித்த வீடியோக்களையம் தங்களின் யூடியூப் சேனலில் பதிவிடுவார்கள்.
இதனால் இன்ஸ்டாகிராம் மற்றும் youtube தளங்களில் இவர்களை லட்சக்கணக்கானோர் பின்பற்றுகிறார்கள். இந்நிலையில், ஆலியா மானசா பழைய பேட்டி ஒன்றில், தான் பங்களா வீடு மற்றும் கார் என்று சொகுசாக வாழ்வதற்கு புத்திசாலித்தனமாக இணையதள முதலீடு செய்வது தான் காரணம் என்றும், அதன் மூலம் தான் லட்சங்களில் சம்பாதிப்பதாகவும், என்னை போல் அதில் முதலீடு செய்தால் நீங்களும் லட்சாதிபதியாகலாம் என்றும் கூறியதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்த தகவல் வைரலானதால், பலரும் ஆலியா மானசாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். அதன் பிறகு, அவர் அது போல் எந்தவிதமான முதலீடும் தான் செய்யவில்லை என்றும் பேட்டியில் அது பற்றி தான் பேசவே இல்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும், வீடு மற்றும் கார் போன்றவற்றை கடனில் வாங்கியதாகவும், அதனை மாத தவண தொகையாக செலுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல், தினந்தோறும் படப்பிடிப்பிற்கு சென்று அந்த சம்பளத்தில் கடனை அடைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சஞ்சீவ் கூறுகையில், இணையதளத்தில் பண மோசடி செய்யும் புதிய MLM கம்பெனி இது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. யாரும் அதை நம்பி ஏமாற வேண்டாம் எனம் கூறியுள்ளார். இது தொடர்பாக, நாங்கள் புகார் அளிக்க உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.