என் அப்பா என்னை மிஸ் யூஸ் செய்தார்.. 15 வயதில் அதற்கு மேல் தாங்கிக் கொள்ள முடியல.. ஷாக்கிங் தகவலை கூறிய குஷ்பூ..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி மூத்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை குஷ்பூ. இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு திமுகவின் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தற்போது தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். இதற்கிடையே தனது சிறுவயதில் தனது  தந்தையால் பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக குஷ்பு கூறி உள்ளார்.

   

அதில் அவர்  கணவர் தன் மனைவியை அடிப்பதும் தனது ஒரே மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதும் தனது பிறப்புரிமை என்று எனது அப்பா நினைத்துக் கொண்டிருந்தார். எனக்கு எட்டு வயதாக இருக்கும்போது அவரை என்னை மிஸ் யூஸ் செய்ய தொடங்கினார்.அவருக்கு எதிராக  துணிச்சலாக நான் பேசத் தொடங்கிய போது எனக்கு வயது 15.  நான் ஏதாவது கூறினால் எனது குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற பயமும்  இருந்தது. அதனால் பல வருடங்கள் அமைதியாகவே இருந்தேன். இதைச் சொன்னால் என்  அம்மாவே என்னை நம்ப மாட்டார்களோ என்ற பயமும் இருந்தது.

15 வயதாகும் போது இனியும் இதை தாங்கிக்கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்ததாகவும் . அதன் பின்  எனது அப்பாவை எதிர்த்து பேசத் தொடங்கினேன். நான் எதிர்த்து பேச தொடங்கியதும் அவர் எங்கள் வீட்டை விட்டு கிளம்பிவிட்டார். குழந்தைப் பருவம் என்பது எனக்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது.  ‘ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டால், அது வாழ்நாள் முழுவதும் ஒரு வடுவாக இருக்கும்’ என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.