
நடிகர் மன்சூர் அலிகான் லியோ திரைப்படத்தில் நடித்த போது, திரிஷாவுடன் தனக்கு ஒரு காட்சி கூட இல்லை என்று கூறியதோடு அவரை பெட்ரூமில் கட்டிலில் போடும் சீன் இருக்கும் என்று நினைத்தேன் என்று கூறியது மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவரின் இந்த பேச்சுக்கு திரிஷா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
திரிஷாவுக்கு ஆதரவாக நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்களும் பலரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் சங்கம் மன்சூர் அலிகான் கூறிய கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கூற வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது