விக்னேஷ் சிவன் தங்கச்சியா இது.! வியப்பில் ரசிகர்கள்…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!

நயன்தாரா- விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக இருந்தவர்கள் நயன்தாரா- விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் என்ற  படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர். பின் இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும், வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்த நிலையில், அனைவரும் எதிர்பார்த்த படி, கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

   

இவர்களின் திருமணம் கடற்கரை ஓரம் திறந்தவெளியில், அலங்கரிக்கப்பட்ட மேடையில், இந்து பாரம்பரிய முறைப்படி மணமகள் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். ஆனால் இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர்.

இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரோடு சினிமாவில் டாப் நடிகையாக இருக்கும் நடிகை நயன்தாரா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்தில்  பல படங்கள் நடித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் தங்கை லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் நயன்தாரா படங்களில் நடித்து வரும் சூழலில், நயன் தாராவின் மாமியாரின் பிறந்தநாள் அன்று குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் விக்னேஷ் சிவனின் தங்கை ஐஸ்வர்யா, அவரது கணவர் மற்றும் பிள்ளைகளும் இணைந்து  எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், விக்னேஷ் சிவனின் தங்கச்சியா, என வியந்துள்ளனர். இது  சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.