சினிமால மட்டும் வில்லத்தனத்தை காட்டுங்க… நேர்ல வேண்டாம்… சிறுவனை கடுமையாக தாக்கிய நடிகர்… வைரலாகும் வீடியோ…!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த நானா படேகர்  பிரபல ஹிந்தி நடிகர் ஆவார். இவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது ஒரு சிறுவன் இவருடன் சேர்ந்து செல்பி எடுக்க வந்திருக்கிறார். அப்போது, படேகர் அந்த சிறுவனை ஓங்கி தலையில் அடித்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவியது.

இதனால், சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், அது தவறுதலாக நடந்ததாகவும், திரைப்படத்தின் காட்சிக்காக ஒரு சிறுவனை நான் அடிக்க வேண்டும். செல்பி எடுக்க வந்த சிறுவன் தான் அது என்று நினைத்து அடித்துவிட்டேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று படேகர்  வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.