
தமிழ் திரையுலகில் சுமார் 20 வருடங்களை தாண்டியும் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. காதல், திருமணம் என்று பல சர்ச்சைகளை தாண்டி ரசிகர்களை கவர்ந்து நீண்ட வருடங்களாக கதாநாயகியாகவே நீடித்து கொண்டிருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா தற்போது இரண்டு மகன்கள் உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியர் அவ்வப்போது தங்கள் குழந்தைகளுடன் இருக்கும் அழகான புகைப்படங்களை வெளியிடுவார்கள். இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருப்பதாவது, விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அடிக்கடி பார்க்க முடிகிறது.
அந்த புகைப்படத்தை மட்டும் அவர்கள் பகிரவில்லை, என்றால் அவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்று தகவல் பரவி விடுகிறது. அதாவது, சமீபத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் unfollow செய்ததாக கூறப்பட்டது. இரண்டு நாட்களாக இணையத்தில் பரவலாக பேசப்பட்ட தகவல் அதுதான்.
இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு விட்டது. விரைவில் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்றெல்லாம் தகவல் பரவி வந்தது. அதன் பிறகு, தான் அவர் தவறுதலாக unfollow செய்தது தெரியவந்தது. பின்னர் மீண்டும் நயன்தாரா, விக்னேஷ் சிவனை பின் தொடர்ந்தார். இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக தான் அடிக்கடி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.