வயசே ஏறாதா…? ரசிகர்களை பாடாய் படுத்தும்… நயனின் காதலர் தின ஸ்பெஷல் வீடியோ…!

நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாகவே நீடித்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து தனக்கான தனி இடத்தை பிடித்திருக்கிறார். தற்போது பிசியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள்.

   

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரட்டை குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களோடு மகிழ்ச்சியாக கொஞ்சி விளையாடும்  புகைப்படங்களை அவ்வப்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.

இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு தன் இணையதள பக்கத்தில் ஒரு வீடியோவை நயன்தாரா வெளியிட்டு இருக்கிறார். நயன்தாரா மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.