பாவம்… இவருக்கு இந்த நிலைமையா?… தனிமையில் கேக்குடன் தியானம் செய்யும் நடிகை ….!

கடந்த 2012-ஆம் வருடத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால், அந்த திரைப்படத்திற்கு சரியான வரவேற்பு இல்லாமல் போனது. எனவே, அவருக்கு வாய்ப்புகள் இல்லை. அதன்பிறகு, தெலுங்கு திரையுலகிற்கு சென்றுவிட்டார். அங்கு பிரபலமான அவர் கோடிகளில் சம்பளம் பெறும் நடிகையானார்.

   

அதன்பிறகு, விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்தார். அதனைத்தொடர்ந்து, ஒரு சில படங்களில் நடித்த அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதனால் சில பட வாய்ப்புகள் பறிபோனது. இந்நிலையில், அவர் தன் பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடியுள்ளார். அங்கு கடலின் மேல் படுக்கையை விரித்து அவர் படுத்திருந்த புகைப்படம் வெளியானது.

தற்போது, தன் பிறந்தநாள் கேக்குடன் தனியாக அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.