நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூஜா ராமச்சந்திரன்… வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை பூஜா ராமச்சந்திரன். இவர் தந்தை ராணுவ அதிகாரி. இவர் கோயம்புத்தூரில் உள்ள CSI பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார்இவர்  தனது எட்டு வயதில் முதல் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

   

ஆரம்ப காலத்தில் பெங்களூர் மற்றும் கோயமுத்தூரில் சில பணிகளை செய்து வந்தார். அதன் பிறகு இவர் எஸ் எஸ் மியூசிக் யில்  பணியாற்றினார்.அதன் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘ஏழாம் அறிவு’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் காதலில் சொதப்புவது எப்படி,

நண்பேண்டா, காஞ்சனா 2, சாமி ஆட்டம், புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், போன்ற படங்களில்  நடித்துள்ளார்.இவர் தமிழில் இறுதியாக நடித்த படம் அந்தரங்கம் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற மொழி படங்கள் நடித்துள்ளார். இவர் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் கோயமுத்தூர் என்ற போட்டியில் பங்கு பெற்று பட்டத்தை வென்றார்.

அதை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் கேரளா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். தெலுங்கில் ஒளிபரப்பான பிக் பாஸ்  சீசன் 2 நிகழ்ச்சிகள் வைல்டு கார்ட் என்ட்ரி ஆக போட்டியாளராக பங்கு பெற்றார்.நடிகை பூஜா ராமச்சந்திரன் சக விஜேவான கிரேக்கை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இருவரின் கருத்து வேறுபாட்டின் காரணமாக2017ல் அவரை விவாகரத்து  பெற்றார்.

அதன் பிறகு  பூஜா ராமச்சந்திரன், 2019ஆம் ஆண்டு நடிகர் ஜான்கோக்கெனை திருமணம் செய்தார்..இவர் கணவர் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சார்பட்டா பரம்பரை மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பொய்க்கால் குதிரை, துணிவு, போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.தற்போது தன் மகன் மற்றும் கணவருடன்  நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி  வருகிறது.