ரசிகர்களை அழைத்து செல்ஃபி எடுத்துக் கொண்ட POP பாடகி ரிஹானா.. வைரலாகும் வீடியோ…

இந்தியாலேயே  மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர்தான் முகேஷ் அம்பானியின்.இவர்  Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான இருந்து வருகிறார்.  முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜனவரி 2023 ல் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இவர்களின் திருமணம் ஜூலை 12ம் தேதி மும்பையில் வைத்து நடைபெறும் என அறிவிக்க பட்டு இருந்தது.

   

இந்நிலையில் இவர்கலின்  திருமண கொண்டாட்டம்  தற்பொழுது தொடங்கிவிட்டது.  குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் இருக்கும் அம்பானி பண்ணை வீட்டில் ‘லகன் லக்வான்’ என்ற விழா நடைபெற்றது. மார்ச் ஒன்று  முதல் மூன்று  வரை நடைபெறும் திருமணத்திற்கு  பாலிவுட் பிரபலங்கள்கிரிக்கெட் வீரர்  சச்சின் டெண்டுல்கர், ஷாருக்கான்,  அமிதாப் பச்சன் மற்றும் MS தோனி ஆகியோர் திருமணத்திற்கு  அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆனந்த்-ராதிகா திருமணத்தில் பாட்டுப் பாட அமெரிக்காவில் இருந்து பிரபல பாடகியான ரிஹானாவை ஜாம்நகருக்கு வரவழைத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் ரிஹானா பாட்டு பாடப் போவது இதுவே முதல் முறையாகும்.பாடகி  ரிஹானாவை இந்தியாவுக்கு அழைத்து வந்து பாட்டு பாட அவருக்கு சுமார் ரூபாய் 74 கோடி கொடுத்திருக்கிறாராம் முகேஷ் அம்பானி. இந்நிலையில் இந்தியா வந்திறங்கிய பாடகி ரிஹானாவிடம் ரசிகர்கள் செல்பீ கேட்க, அவர் மகிழ்ச்சியோடு அனைவரையும் கூப்பிட்டு செல்பீ எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .