12 ஏக்கர் நிலத்தில் இலவச மருத்துவமனை கட்ட இருக்கும் சூப்பர் ஸ்டார்… எங்கே தெரியுமா?..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் தான் நடிகர் ரஜினிகாந்த் இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லால் சலாம்’ இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.  தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார்.அதைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171-வது திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.

   

இந்நிலையில் நடிகர் ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் இணைந்து 172-வது திரைப்படம் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தயாரிப்பாளர் சஜித் நடியாத்வாலா தயாரிப்பில் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சென்னையில் மருத்துவமனை கட்டி வரும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.

இவர் ஓம்.எம்.ஆர் சாலையில் இருந்து தாழம்பூர் செல்லும் வழியில் 12 ஏக்கர் நிலத்தினை வாங்கி இருக்கிறார்.இதன் பத்திர பதிவு திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு நடந்துள்ளது. இந்த 12 ஏக்கரில் ரஜினி அவர்கள் மருத்துவமனை கட்ட இருப்பதாக கூறப்படுகிறது.இந்த மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளிக்கப்பட உள்ளதாகவும், வசதி படைத்தவர்களுக்கு காசு வாங்கப்படும் என்றும் கூறப்படுகிறது .  இதுகுறித்து கூடிய விரைவில் ரஜினிகாந்த் அறிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க படுகிறது.அவருக்கு அவரது  ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.