என்னடா நடக்குது… அடுத்த திருமணத்திற்கு தயாரான ரச்சிதா…. மாப்பிள்ளை ரெடி…!

சின்னத்திரையில் பிரபல ஜோடிகளாக வலம் வந்த ரச்சிதா, தினேஷ் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். பல நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்றுள்ளனர். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் திடீரென்று விரிசல் ஏற்பட்டது. கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

   

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் ரட்சிதா பங்கேற்ற நிலையில், தற்போது நடந்து முடிந்த ஏழாவது சீசனில் தினேஷ் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். அதில் அவர் எந்த இடத்திலும் ரட்சிதாவை விட்டுக்கொடுத்து பேசவில்லை. மறைமுகமாக அவரைப் பற்றி நல்ல கருத்துக்களையே தெரிவித்து வந்தார்.

இதனால் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருந்தது. எனினும் ரச்சிதா தன் முடிவிலிருந்து மாறவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் தினேஷ், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தெரிவித்ததாவது, ரச்சிதா ஒரு சுவற்றை கட்டி அதற்குள்ளேயே இருக்கிறார். அதை என்னால் உடைக்க முடியாத விதத்தில் அது பலமாகி கொண்டே போகிறது.

இனிமேல் நான் என் அடுத்த வாழ்க்கைக்கான பயணத்தை தொடருவேன் என்று கூறிவிட்டார். தற்போது கன்னட திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வரும் ரட்சிதா, அத்திரைப்படம் வெளிவந்த பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொள்வார் என்ற தகவல் பரவி வருகிறது. அத்திரைப்படத்தின் இயக்குனர் தான் அவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றி அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.