
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஆனது டாப் 5 டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்துள்ளது .இந்த சீரியலில் தற்போது எதிர்பாராத ஒரு ட்விஸ்ட் நடந்துள்ளதுஅதில் கோபி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ராதிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு பல பிரச்சனைகள் நடந்தது. அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேறிய கோபி மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு ராதிகாவுடன் வந்துவிட்டார். இந்நிலையில் கோபிக்கு ஏற்கனவே பேரன்,பேத்தி எடுத்து தாத்தாவான கோபி. மீண்டும் தந்தையாக போகிறார். ஏற்கனவே ராதிகாவுக்கு ஸ்ருதி என்ற மகள் இருக்கிறார் .
தற்போது இரண்டாம் முறை ராதிகா கர்ப்பமாக உள்ளார். இந்த செய்தி முதலில் கேட்டவுடனே சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார். அதன் பிறகு கோபி அய்யய்யோ என்று ஷாக்காகி உள்ளார்.தற்போது அந்த ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.