மன்சூர் அலிகான் மட்டும் இளிச்ச வாயா…? சூப்பர் ஸ்டார் பண்ணா தப்பில்லையா…? வைரலாகும் தமன்னா வீடியோ…!

மன்சூர் அலிகான் பேட்டி ஒன்றில் நடிகை த்ரிஷா குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. திரை நட்சத்திரங்கள் பலரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள். நடிகை திரிஷா, தன்னை பற்றி பேசிய மன்சூர் அலிகானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், நடிகை தமன்னா குறித்து ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ள வீடியோவை இணையதளவாசிகள் வைரலாக்கி வருகிறார்கள். அதில் ரஜினிகாந்த் கூறியதாவது, “எனக்கு சூட்டிங் இருக்கு என்று சொன்னார்கள். மதியத்துக்கு பிறகு வந்தால் போதும் என்றார்கள்.

   

மதியத்துக்கு பிறகு, சார் சாப்பிட்டு விட்டு சொல்றோம்னு சொன்னாங்க. ஐந்து மணி ஆகிட்டு. ஒரு மணி நேரத்தில் பிரேக் வந்துடும். அதன் பிறகு மேக்கப் போட சொன்னாங்க. 7:30 மணிக்கு கூப்பிட்டாங்க. உள்ளே போனதும், ஜே ஜேனு இருந்துச்சு. ஜானி மாஸ்டர், ஒரே பாட்டு என்று கூறி பில்டப் கொடுத்திருந்தார்.

நானும் ரிகர்சல் செய்து ரெடியா இருந்தேன். லாஸ்ட் நிமிசத்துல கூப்பிட்டு ஒரே ஒரு மூமென்ட் தான். சரியா தமன்னாவோட பேசக் கூட இல்லை என்றார். ரஜினிகாந்தின் இந்த பேச்சை மன்சூர் அலிகான் பேச்சோடு ஒப்பிட்டு இணையதளவாசிகள் அந்த வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.