விஜயகாந்த் படத்தை ரீமேக் செய்து… பாலிவுட்டில் பேரும் புகழும் பெற்ற ரஜினி… எந்த படம் தெரியுமா…?

திரைத்துரையில் மிகச் சிறந்த நடிகராகவும், மனிதராகவும் இருந்து பல உதவிகளை மக்களுக்கு செய்து வந்த கேப்டன் விஜயகாந்த் இன்று காலை உடல்நல குறைவு காரணமாக மரணம் அடைந்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்த சமயத்தில், நேரடியாக சென்று சந்தித்த ரஜினிகாந்த் அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்.

வழக்கமாக, பெரிய கதாநாயகர்களின் திரைப்படங்கள் வெற்றி பெற்றுவிட்டால், அதனை மற்ற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடுவார்கள். அந்த வகையில், நடிகர் விஜயகாந்தின் படங்களும் மற்ற மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழில் வெளிவந்த அவரின் ஒரு படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி கதாநாயகர்களால் ரீமேக் செய்யப்பட்டது.

   

அந்த திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறை. அத்திரைப்படத்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியிருந்தார். நடிகர், சிரஞ்சீவியை வைத்து தெலுங்கிலும் அத்திரைப்படத்தை அவரே இயக்கி இருந்தார். Chattaniki Kallu Levu என்ற அந்த திரைப்படம் விஜயகாந்தின் சட்டம் ஒரு இருட்டறை என்பது பலருக்கும் தெரியாது.

மேலும், இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட அந்த திரைப்படம் Andhan Kanoon என்ற பெயரில் வெளிவந்து, மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்தியில் அத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.