
நடிகை ரம்பா தமிழ் திரையுலகில் 90களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாநாயகியாக வலம் வந்தார். பலரின் கனவு கன்னியாக இருந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள். அதன்பிறகு, அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு மூன்று பிள்ளைகளுக்கு தாயானார்.
தற்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ரம்பாவின் கணவர் சமீபத்தில் ஷோ ரூம் திறந்திருக்கிறார். திறப்பு விழாவிற்கு, பிரபல நடிகை தமன்னா அழைக்கப்பட்டிருக்கிறார். அப்போது, நடிகை தமன்னாவும், ரம்பாவின் கணவரும் அருகருகே நெருக்கமாக இருக்கிறார்கள்.
இருவரும் சிரித்து பேசும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இதை பார்க்கும் ரசிகர்கள், ரம்பா இதை பார்த்தால் அவ்வளவுதான் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.