திடீரென்று மாற்றப்பட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம்… என்ன காரணம் தெரியுமா…? வெளிவந்த தகவல்…!

உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்களை தயாரித்து கொண்டிருக்கிறது. அந்நிறுவனமானது முரசொலி அலுவலகத்தில் தான் முதலில் இயங்கி வந்தது. அதன் பிறகு சில காரணங்களுக்காக வேறு இடத்திற்கு மாற்றிவிட்டனர்.

   

இந்நிலையில், மீண்டும் முரசொலி அலுவலகத்திற்கு அந்நிறுவனத்தை மாற்றி விட்டதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருக்கிறார். மேலும் வேறு இடத்திலிருந்தால், உதயநிதி அலுவலகத்திற்கு சென்று வருவது பலருக்கும் தெரிய வரும்.

ஆனால், முரசொலி அலுவலகத்தில் அந்நிறுவனம் இருந்தால் அது அவ்வளவாக வெளியில் தெரியாது என்பதால் மாற்றியிருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் ராசி பார்த்தும் நிறுவனத்தை அவர்கள் மாற்றியிருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.