காதல் திருமணம் முதல் விவாகரத்து வரை.. தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை வெளிப்படையாக கூறிய சீரியல் நடிகை ரேணுகா.!

சின்னத்திரையில் தொகுப்பாளனியாக பணியாற்றி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை பிரியதர்ஷினி. இவர் 1978 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தவர் சென்னையில் வளர்ந்து தன்னுடைய பள்ளி படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார்.  இவர் நடிகர் பாக்யராஜ் நடிப்பில் வெளியான ‘தாவணிக் கனவுகள்’ என்ற திரைப்படத்தில் நடிகர் பாக்யராஜின் கடைசி தங்கையாக நடித்திருப்பார்.

   

அதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் நடிகை பிரியதர்ஷினி சிறுவயதிலேயே தன்னுடைய தந்தை இறந்து விட்டாலும் அவர் கூறிய வாழ்க்கை நெறிகளை தற்போதும் கடைபிடித்து வருகிறாராம். நாங்கள் இப்போது வசதியாக வசதி வாய்ப்புடன் இருக்கிறோமானால் என் தந்தை இறக்கும்போது அவர் அணிந்து கொள்ள ஒரு நல்ல சட்டை கூட இல்லை அதைக் கூட வாங்கி தர முடியாத நிலையில் இருந்தோம் என கண்கலங்கி பேசியுள்ளார்.

நடிகை பிரியதர்ஷினி தங்களுடைய சிறு வயதில் கொடுமைகளை அனுபவித்திருந்தாலும் கலை துறையின் மீது ஆர்வம் இருக்கும் சிறப்பான எதிர்காலம் கொடுக்கிறது. சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் போதே மீடியாவை சேர்ந்த ரமணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது தங்கையான திவ்யதர்ஷினி தன்னுடைய கணவரை விவகாரத்துசெய்தார்.

அடுத்த சில வருடங்களில் பிரியதர்ஷினி தன்னுடைய கணவரை விவாகரத்து செய்கிறார் என்ற வதந்திகள் இணையத்தில் பரவியது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தன்னுடைய துறையில் கவனம் செலுத்தி வருகிறார் பிரியதர்ஷினி.தற்போது சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில்  ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளார்.

எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய கதாபாத்திரமும் இவர் பேசும் விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.இவருடைய உண்மையான பேசும் விதம் என்பது வேறு. ஆனால் எதிர்நீச்சல் சீரியலில் இவர் பேசக்கூடிய விதம், ஸ்லாங் இவருடைய அப்பாவுடைய பேச்சு நடை என்பது குறிப்பிடத்தக்கது.தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்த இவருடைய தந்தை வீட்டில் பேசக்கூடிய ஸ்லாங்கில் தான் சீரியலில் பேசிக் கொண்டிருக்கிறார் பிரியதர்ஷினி என்பது குறிப்பிடத்தக்கது.