
ஐபிஎல் தொடர் ஆரம்பமானாலே திருவிழாக்கள் போல ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். சிஎஸ்கே அணிக்கு ரசிகர்களின் ஆதரவு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவிற்கு தல தோனி மீதும் சிஎஸ்கே அணி மீதும் உயிராக இருக்கும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், ஆர்.ஜே பாலாஜி தன் பேட்டி ஒன்றில் சிஎஸ்கே அணி குறித்து தெரிவித்திருப்பதாவது, எனக்கு சிஎஸ்கே அணியை ரொம்ப பிடிக்கும். ஆனால் அதில் ஒரு தமிழ் வீரர் கூட இடம்பெறவில்லையே என்ற மன வருத்தம் இருக்கிறது. குஜராத் அணியில் சாய் சுதர்சன் நன்றாக விளையாடி 65 ரன்கள் எடுத்து அந்த அணியை ஜெயிக்க வைத்தார்.
ஆனால் நாம் சிஎஸ்கே அணிக்கு தான் ஆதரவு கொடுப்போம். எனினும், அந்த அணியில் ஒரு தமிழ் வீரர் கூட இடம் பெறவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. தற்போது டோனி ஓய்வு பெற இருக்கிறார். அதன் பிறகு யாரென்றால் ருத்ராஜ் கெய்க்வாட் உட்பட பலர் பெயரை கூறுகிறார்கள். அவர்களையும் எனக்கு பிடிக்கும். ஆனால், அணியில் ஒரு தமிழ் வீரர் வரவேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை என்று கூறி இருக்கிறார்.