நடிகைகளையே ஆசைப்பட வைத்த கொள்ளை அழகு.. பிடி கொடுக்காமல் தப்பித்த சாக்லேட் பாய் ஹீரோக்கள்.. யார் யார்னு பாருங்க..!

திரை உலகில் பல நடிகர்கள் இருந்தாலும் ஒரு சில கதாநாயகர்கள் பெண்களை மயக்கும் விதமாக வசீகரிக்கும் தோற்றத்துடன் இருப்பார்கள். எவ்வளவு வயது ஏறினாலும் ரசிகைகளின் விருப்பமான நாயகனாக வலம் வருவார்கள். அந்த வகையில், அதிக அழகு இருந்தும் எந்தவித கிசுகிசுக்களிலும் சிக்காமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்த சாக்லேட் பாய் கதாநாயகர்கள் குறித்து பார்ப்போம்.

அரவிந்த்சாமி என்ற பெயருக்கு ஒரு தனி அழகு இருக்கிறது. வெள்ளையாக இருந்தால் அரவிந்த்சாமி மாதிரி இருப்பாரா? என்று தான் கேட்பார்கள். அந்த காலகட்டத்தில் பெண்கள் விரும்பும் நாயகனாக வலம் வந்தார் அரவிந்த்சாமி. பெண் ரசிகைகள் அவரை சூழ்ந்து வந்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அமைதியாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

   

நடிகர் வினித், ஆவாரம் பூ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு, துணை கதாநாயகனாகவும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். எந்தவித ஆர்ப்பாட்டமும் காட்டாத கதாநாயகனாக இருந்தாலும், அவரின் அழகு பல ரசிகைகளை கட்டி போட்டது என்றே கூறலாம்.

அடுத்ததாக மாதவன், அறிமுக திரைப்படமான அலைபாயுதே மூலமாகவே பெண்களை பெரிதும் ஈர்த்துவிட்டார். தொடர்ந்து இவர் நடித்த என்னவளே, மின்னலே, ரன் போன்ற திரைப்படங்கள் காதலை மையப்படுத்தும் வகையில் இருந்தது. எனவே, ரொமாண்டிக் நாயகனாக வலம் வந்து ரசிகைகளின் கனவு நாயகனாக தற்போது வரை திகழ்ந்து வருகிறார். எனினும், தற்போது வரை எந்த வித கிசுகிசுகளிலும் சிக்கவில்லை.

அடுத்ததாக அருண் விஜய், முக வசீகரம் மட்டுமல்லாமல் உடல் தோற்றமும் அவரை ஹேண்ட்ஸம் கதாநாயகனாக ஜொலிக்க வைத்தது. ஆரம்ப காலகட்டத்தில் அவரின் திரைப்படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றது. அதன் பிறகு நீண்ட நாட்கள் வெற்றி படங்களை கொடுக்காமல் இருந்த அவர், என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்தார். எனினும், இவர் மீது ஒரு கிசுகிசுக்கள் கூட வந்ததில்லை.

அதனைத் தொடர்ந்து நடிகர் சாம், 90-களில் இவரை விரும்பாத ரசிகைகளே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு இளம் பெண்களின் மனங்களை கொள்ளை கொண்டவர். இவரின் திரைப்படங்களில் வரும் காதல் பாடல்கள் இன்று வரை ரசிகர்களால் விரும்பப்படுகிறது. இயற்கை, 12பி, லேசா லேசா, ஏபிசிடி, அன்பே அன்பே என்று பல திரைப்படங்களில் காதல் நாயகனாக மக்கள் மனங்களில் இடம் பிடித்து விட்டார். எனினும், இவர் மீது கிசுகிசுக்கள் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.