
தளபதி விஜய் இந்த அளவிற்கு தன் வாழ்வில் உயர்ந்து வர அவரின் தந்தை மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில், தன் மகனை உயர்த்துவதற்கு பல முயற்சிகள் எடுத்திருக்கிறார். அதில் ஒன்று, கேப்டன் விஜயகாந்த் அவர்களிடம் சென்று தன் மகனுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்குமாறு கேட்டு இருக்கிறார்.
உடனே அதற்கு சம்மதித்த விஜயகாந்த் செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் விஜய்யை தன்னுடன் நடிக்க வைத்தார். மேலும், அதற்கான சம்பளத்தையும் அவர் பெறவில்லை. அதன் பிறகு விஜய்க்கு பூவே உனக்காக திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து இன்று தளபதியாக உயர்ந்து நிற்கிறார்.
இந்நிலையில், விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில், கேப்டன் விஜயகாந்தின் இறுதிச் சடங்கிற்கு வந்திருந்த தளபதி விஜய், அவரின் உடலைப் பார்த்தவாறு 10 நொடிகள் அப்படியே நின்று விட்டார்.
அதற்கு என்ன அர்த்தம்? என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த எஸ்.ஏ. சந்திரசேகர், நன்றி தான் காரணம். யாராக இருந்தாலும் தன்னை வளர்த்து விட்ட நன்றி இருக்கத்தான் செய்யும். அந்த உணர்வு தான் அங்கு வெளிப்பட்டது என்று கூறியிருக்கிறார்.