தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி மூத்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சரண்யா.இவர் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘நாயகன்’ திரைப்படத்தில் நடிகர் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் நாயகன், மனசுக்குள் மத்தாப்பூ ,சிகப்பு தாலி, அன்று பெய்த மழை ,அஞ்சலி, உலகம் பிறந்தது எனக்காக,
கருத்தம்மா, பாண்டி, குருவி ,எம்டன் மகன், களவாணி, நீர் பறவை, பப்பாளி, வேலையில்லா பட்டதாரி, பெங்களூர் நாட்கள், மகளிர் மட்டும், ஜூங்கா, எம் ஜி ஆர் மகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இவர் வெள்ளிதிரை மட்டுமல்லாமல் ஆரம்ப காலகட்டத்தில் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் நடிக்கும் பெரும்பாலான நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் ஏன் விஜய் உடன் மட்டும் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று கேட்க அதற்கு இவர் சிவகாசி மற்றும் குருவி படங்களில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.ஆனால், அம்மாவாக நடிக்க வாய்ப்பு வரவில்லை ஆனால், நிறைய பேர் என்னை கேட்கிறார்கள் என்று நான் கூறியது கூட, நான் படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிக்க ஆசை என்று சொன்னேன் என்பது போல் போட்டுள்ளனர். என்று என்று கூறியுள்ளார். இன்னும் அதற்கான வாய்ப்பு வரவில்லை என்று நினைக்கிறேன். கண்டிப்பாக அந்த வாய்ப்பு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று இதில் கூறியுள்ளார்.
Actress Saranya…. hope to see in Mom-son combo soon #ThalapathyVijay #Vijay @actorvijay#Leo #LeoIndustryBlockbuster #Thalapathy68 #LeoOnNetflix pic.twitter.com/BxqLy7RnbJ
— பொய்கையலர்???????? (@pogaiyalar) December 9, 2023