
இயக்குனர் அன்பழகன் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் வருடத்தில் வெளிவந்த சாட்டை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் யுவன். அதனைத்தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எனினும், அந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஓட்டல் ஒன்றில் பரோட்டா பாஸ்டராக வேலை செய்து கொண்டே யுவன் பேட்டி அளித்திருக்கிறார். பரோட்டாக்களை விதவிதமாக எப்படி தயார் செய்ய வேண்டும்? என்று தெளிவாக கூறிக்கொண்டே அவர் அளித்த பேட்டி இணையதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.
திரைத்துரையில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த யுவன், திடீரென்று பரோட்டா மாஸ்டராக மாற காரணம் என்ன என்பதை அவரே கூறியிருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, இயக்குனர் பாலாவின் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். அத்திரைப்படம் குறித்த அறிவிப்பும் வெளிவந்தது.
ஆனால், அத்திரைப்படம் தொடங்கப்படாமலேயே நின்று போனது. அதன் பிறகு நான் எங்கு வாய்ப்பு கேட்டு போனாலும், பாலா சார் திரைப்படம் என்ன ஆச்சு? என்று கேள்வி கேட்டனர். அந்த திரைப்படத்திற்காக தான் பரோட்டா செய்ய கற்றுக் கொண்டேன். கடைசியில் அதுவே என் தொழிலாகிப் போனது என்று தெரிவித்திருக்கிறார்.