எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா மகனை பார்த்துள்ளீர்களா..? பெரிய பையனாக உள்ளாரே..! புகைப்படம் இதோ..!!

நடிகை கனிகா

நடிகை கனிகா தமிழ் சினிமாவில் 5 ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமாகி, எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர்.  மேலும் இவர் கன்னடம், மலையாளம், தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

எதிர் நீச்சல் தொடரில் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை!- Dinamani

   

எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகாவுக்கு இவ்ளோ பெரிய மகனா?.. இதோ புகைப்படம் | Actress Kaniha Son Latest Photo

இந்நிலையில் நடிகை கனிகா தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றான எதிர்நீச்சல் தொடரில் நடிக்கிறார். இது TRPயில் சமீபகாலமாக பட்டையை கிளப்பி, மக்கள் மனதில் தனி இடத்தையும்  பிடித்துள்ளது. இந்த தொடரை திருச்செல்வம் இயக்கி, நடித்தும் வருகிறார். இந்த தொடரில் ஆதி குணசேகரனின் மனைவியாக ஈஸ்வரி எனும் ரோலில் நடிகை கனிகா நடிக்கிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவரான இவர் அவ்வப்போது இவரின் மாடர்ன் உடை புகைப்படங்களை வெளியிடுவார்.

Kaniha Latest Photos with Her Husband Birthday

புகைப்படம்

நடிகை கனிகா ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை 2008 -ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவருக்கு 12 வயது ஆகிறது. இந்நிலையில் கனிகா தனது மகனுடன் எடுத்துள்ள போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை கனிகாவுக்கு இவ்ளோ பெரிய மகன் உள்ளாரா என வியப்படைந்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்,

Gallery