சீரியலில் லிப்லாக் கிஸ் சீன்ஸ்… இயக்குனரால் கஷ்டப்பட்ட சீரியல் நடிகை ப்ரீத்தி பேட்டி..!!

நடிகை ப்ரீத்தி சர்மா

சின்னத்திரை சீரியல் நடிகைகள் அண்மை காலமாக சீரியல்களில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி  பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ப்ரீத்தி சர்மா தான் நடிக்கும் சீரியல்களில் லிப்லாக் முத்தக்காட்சிகள் வரம்பு மீறுவதாக பேட்டி அளித்துள்ளார்.

   

தமிழ், தெலுங்கு மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 2018 ஆம் ஆண்டு முதல் நடித்து வரும் இவர், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் தொடரில் அனிதாவாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் சித்தி–2 என்னும் தொலைக்காட்சித் தொடரில் வென்பா ரோலில் நடித்து வருகிறார்.

இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, தனிப்பட்ட சினிமா வாழ்க்கைக்காகவும், கேரியருக்காகவும், இதையெல்லாம் சகித்துக்கொண்டு இயக்குனர்கள் சொல்வதை செய்ய வேண்டும். நீங்கள் அனைவரும் இந்த மாதிரி லிப்லாக் முத்தம் சீனில் நடிப்பது மட்டுமே பார்க்கிறீர்கள்.

ஆனால் அந்த காட்சியை நடிக்கும் போது ஷூட்டிங் தளத்தில், படபடப்பாகவும் கூச்சமாகவும் வெட்கமாகவும் தான் இருக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் எல்லாம் தாண்டி அந்த காட்சியில் நடித்து கொடுப்போம். இவ்வாறு வெளிப்படையாக பேசியிருக்கிறார் ப்ரீத்தி சர்மா.