
சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவரான ரட்சிதா மகாலட்சுமி, உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததில் இருந்து பிரபலமானார்.
நடிப்பின் மீது கொண்டுள்ள ஆர்வம் காரணமாக வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி இறுதியாக சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்து பிரபலமாகிய இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து வந்தார். மேலும் இறுதியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, நல்ல வரவேற்பையும் மக்கள் மத்தியில் பெற்றார். இவர் தன்னுடன் நடித்த சக சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின் இவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்தார். இவரின் விவாகரத்து பிரச்சனை தற்போது நடந்து கொண்டுள்ளது.
இந்நிலையில் டிவி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரச்சிதா பங்கேற்றுள்ளார். அப்போது பேசும் போது, அவரிடம் 5000 புடவைகள் இருப்பதாகவும் கூறினார். மேலும் அந்த புடவைகளை வைத்திருப்பதற்காக பெங்களூரில் தனி பிளாட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். இதை கேட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் அதிர்ச்சிக்கு உள்ளனார்.