பள்ளி படிக்கும்போதே கட்டாயப்படுத்திய இயக்குனர்…. ஓபன் டாக் செய்த ‘காதல் மன்னன்’ பட நடிகை

இயக்குனர் சரண் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் 1998 ஆம் ஆண்டு வெளியான படம் ‘காதல் மன்னன்’ இப்படத்திற்கு இசையமைப்பாளர் பரத்வாஜின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் திலோத்தமா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை மனு.

   

இப்படை இந்த படத்திற்கு பிறகு அவர் வேறு ஒரு படத்திலும் நடிக்கவில்லை  சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார். பள்ளி படிக்கும் காலத்திலேயே காதல் மன்னன் படத்திற்கு வாய்ப்பு கிடைத்தது தன்னை வற்புறுத்தி தான் இயக்குனர் சரண் நடிக்க வைத்தார் என்று மனு தெரிவித்திருக்கிறார் நடிகர் விவேக் மற்றும் சரண் இருவரும் கட்டாயப்படுத்தி தான் நடிக்க வைத்தனர்.

படிப்பு தான் முக்கியம் எனக்கு தோன்றியதால் அதில் மட்டும் நான் கவனம் செலுத்தி வந்தேன் எனது குடும்பம் சினிமா பின்னணி கொண்டதில்லை எல்லோரும் டாக்டர்கள் தான். என் தாத்தா அசாம் மாநிலத்தின் முதல் முதலமைச்சர் Gopinath Bordoloi நான் படிப்பதற்காக மட்டும்தான் சென்னைக்கு வந்தேன். அந்தப் படத்திற்கு பிறகு முழுவதும் படிப்பில் தான் கவனம் செலுத்தி வந்தேன். என் கணவரும் தற்போது டாக்டராக இருக்கிறார். என்று  மனு கூறியிருக்கிறார்.