சினிமாவில் அதற்கு நான் ஒத்துவரல… கேமராமேன் செய்த செயலால் துடித்து போன நடிகை தாரணி பேட்டி.. வீடியோ வைரல்..!!

நடிகை தாரணி

தமிழ் சினிமாவில் கடந்த 1988ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘உன்னால் முடியும் தம்பி’ என்ற படத்தில் கமலின் தங்கையாக அறிமுகமானவர் தான் நடிகை தாரணி. பின் பாலைவன பறவைகள், பெரிய மருது, மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட  50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், செந்தில், கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் சேர்ந்து நகைச்சுவையிலும் அசத்தியுள்ளார்.

   

மேலும் தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் தாரணி, தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ஒரு பெண்ணாக இருந்தால் திரைத் துறையில் அதை எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது என திரையுலகில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, “முதல் இரண்டு மூன்று படங்களில் எனக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஆனால் ஹீரோனியாக ஒரு படத்தில் நடித்தபோதுதான், அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினையை எதிர்கொள்ள நேர்ந்தது. மேலும் அந்த படத்தின் இயக்குநர் மற்றும் கேமராமேன் இரண்டு பேருமே என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்யுமாறு கேட்டார்கள்.

அதில் இயக்குனர் கூட பரவாயில்லை எனவும் கேமராமேன் தான் என்னை அதிகம் தொந்தரவு செய்தார் எனவும் கூறினார். “தங்கச்சி ரோலில் இருந்த உங்களை ஹீரோயினாக ஆக்கியிருக்கோம்” என கூறி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னார். நான் உடனே அவரிடம் தப்பா எடுத்துக்காதீங்க, நான் அப்படிப்பட்டவள் இல்லை என சொன்னேன்.

நீங்கள் என்னைப் பற்றி யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். யாராவது என்னை தப்பாக சொன்னார்கள் என்றால் நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்’ என்று சொன்னேன். அப்போது இந்த மாதிரி ஒரு பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை. எனவே அவரும் அதை விட்டுவிட்டார்.

ஆனால் இதை மனதிலேயே வைத்திருந்து பழி வாங்கும் எண்ணத்தில், கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் போது ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அந்த கேமராமேன் அதிகபட்சமான சூடு கொண்ட ஒரு லைட்டை என் முகத்தில் படுமாறு படார் என திருப்பினார். அந்த லைட்டின் சூடு தாங்க முடியாமல் அம்மா என்று அலறி விட்டேன். இந்த சம்பவம் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது’. இவ்வாறு அந்த பேட்டியில் நடிகை தாரணி கூறினார். வீடியோ இதோ,